/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/852_9.jpg)
செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி படக்குழு இன்று வெளியிட்டுள்ள அப்டேட்டில் நாளை திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் அறிவிப்புகள் வெளியாகும் எனக்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து கடுப்பான தனுஷ் ரசிகர்கள் இதெல்லாம்ஒரு அப்டேட்டாஎன்று படக்குழுவை வறுத்தெடுத்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய அறிவிப்பு படத்தின் ரிலீஸ் அல்லது ட்ரைலர்குறித்தஅறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)