ADVERTISEMENT

'தளபதி 66’ல் 'V' செண்டிமெண்ட்; டைட்டில் குறித்து வெளியான தகவல்!

11:22 AM Jun 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கவுரவ வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி 66 படத்திற்கு தெலுங்கில் ’வாரிசுடு’ என்றும், தமிழில் ’வாரிசு’ என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அன்றைய தினமே டைட்டிலுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அஜித் படங்களில் வி(V) செண்டிமெண்டை பயன்படுத்தி வீரம், வேதாளம், விவேகம், வலிமை என தொடர்ந்து டைட்டில் வைக்கப்படுகிறது. அதே போன்று தற்போது விஜய் படத்திற்கு வி(V) வரிசையில் வாரிசு என பெயரிடப்பட்டதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT