‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் 'தளபதி 66' படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், "இந்த படம் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுநல்ல குடும்பப் படமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் கதையைக் கேட்ட விஜய், இந்த மாதிரியான கதை கேட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டது எனத் தன்னிடம்கூறியதாகவும் தில் ராஜு தெரிவித்துள்ளார்.