ADVERTISEMENT

டி.ஆர். தோல்வி... யாருக்கு வெற்றி??? தேர்தல் முடிவுகள் வெளியீடு...

10:27 AM Nov 23, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார்.

இந்த தேர்தலில் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்களும் நேற்று ஓட்டுப்போட்டனர்.

இதற்கு முன்பு நடைபெற்றுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தேர்தலில் நேற்று பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து எண்ணப்பட்ட ஓட்டுகளில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தரை விட 220 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றுள்ளார் முரளி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT