தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில்ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், அருண் விஜய், கவிஞர் வைரமுத்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், டி. ராஜேந்தர் உள்ளிட பல திரைபிரபலங்கள் தங்களுடையவாக்குகளை செலுத்தியுள்ளனர்.