ADVERTISEMENT

‘சூர்யா 42’ படத்தின் பெயர் அறிவிப்பு!!

10:00 AM Apr 16, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ’சூர்யா 42’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவள்ளூரில் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் அப்டேட் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியானது. அதன்படி 16ஆம் தேதி (16.04.2023) இன்று காலை 9.05 மணிக்கு டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்காக தயார் செய்யப்பட்டுள்ள வீடியோவில் இரு மலைகளை ஒரு குதிரையில் வீரன் ஒருவன் பக்கத்தில் நாய் ஒன்றுடன் தாண்டுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய படையுடன் அந்த வீரன் மலைகளை தாண்ட முயற்சிப்பதாகவும் கழுகு ஒன்று வீரனின் தலைக்கு மேல் பறப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT