surya act 5 role surya 42 movie

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். கிர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதனிடையேசூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 41 படத்திலும்நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் சூர்யா இப்படத்தில் 5 கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டரில்அறத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என்ற பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பெயர்கள்தான் சூர்யா நடிக்கும் 5 கதாபாத்திரங்களின் பெயர் எனகூறப்படுகிறது.