surya 42 movie motion poster released tomorrow

Advertisment

சூர்யா,இயக்குநர் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சிறுத்தை சிவா இயக்கும் ’சூர்யா 42’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகைதிஷா பத்தானி நடிக்க,யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ’சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம்பீரியட் கலந்த ஆக்சன் கதையாகஇருக்கும் எனக் கூறப்படுகிறது.