/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/19_42.jpg)
சூர்யா, இயக்குநர் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சிறுத்தை சிவா இயக்கும் ’சூர்யா 42’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பத்தானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ’சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் அறத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு பெரிய போர் நடப்பது போலவும் அதனை கையில் கோடாரியுடன் சூர்யா கம்பீரமாக நின்று பார்ப்பது போலவும் காட்சி அமைந்துள்ளது. இந்த போஸ்டரை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் அந்த மோஷன் போஸ்டரில் வலிமை, வீரம் மிக்க கதையாக இப்படம் இருக்கும் எனவும் 3டி-யில் இப்படம் 10 மொழிகளில் வெளியாகும் எனவும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)