ADVERTISEMENT

"அடித்தட்டு மக்களின் இன்னல்கள்..." - ‘ஜெயில்’ படம் குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. ட்வீட்

02:43 PM Dec 06, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ‘ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘ஜெயில்’ படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எளிய மக்களின் வாழ்வியலை பொதுச்சமூகத்தின் முன் ‘அங்காடித்தெரு’ என்ற மகத்தான படைப்பாகத் தந்தவர் இயக்குநர் வசந்தபாலன். அந்த தொடர்ச்சியில் தற்போது நகரத்து அடித்தட்டு மக்களின் இன்னல்களை முன்வைத்து திரைக்கு வரவிருக்கும் வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படம் வெற்றிபெற எனதன்பு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT