/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raja_34.jpg)
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தை க்ரிக்ஸ்சினிமாஸ் கிரியேஷன்ஸ்நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது. மேலும், படத்தைப் பார்த்த பலரும் இயக்குநர் வசந்தபாலனைபாராட்டிவருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர்பாரதிராஜா ‘ஜெயில்’ படத்தைப் பாராட்டியதாக வசந்தபாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இன்று காலை இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் அழைத்து ‘பாலா இந்த மாதிரி கதையெல்லாம் எங்கய்யா பிடிக்கிற? பிரமாதமாக இருக்கு. ஜீவியும் அந்த புதுப்பொண்ணும் என்ன மாதிரி நடிச்சிருக்காங்க. சென்னை தமிழ எங்கய்யா கத்துக்கிட்ட. நல்லாயிருந்துச்சுய்யா என்று பாராட்டிய வண்ணம் இருந்தார்.மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் அழைத்து "பாலா இந்த மாதிரி கதையெல்லாம் எங்கய்யா பிடிக்கிற.?பிரமாதமாக இருக்கு. ஜீவியும் அந்த புதுப்பொண்ணும் என்ன மாதிரி நடிச்சிருக்காங்க.சென்னை தமிழ எங்கய்யா கத்துக்கிட்ட நல்லாயிருந்துச்சுய்யா என்றுபாராட்டியவண்ணம் இருந்தார்.மகிழ்ச்சி
— Vasantabalan (@Vasantabalan1) December 14, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)