/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jail_12.jpg)
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா பரவல் காரணமாகப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது கரோனாபரவல் குறைந்துள்ளதால் ஜெயில் படத்தை திரைக்கு கொண்டு வருவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோக்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'ஜெயில்' படத்தின் 'நகரோடி' என்ற பாடலை இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யா இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுத ஜி.வி பிரகாஷ், தெருக்குரல் அறிவு, அனன்யா பாட் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
▶️https://t.co/LX1US8pgR7@gvprakash@TherukuralArivu@Ananyabhat14@iamSandy_Off@Vasantabalan1@abarnathi21@Krikescc@kegvraja@StudioGreen2@SonyMusicSouth@proyuvraaj
— pa.ranjith (@beemji) November 9, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)