ADVERTISEMENT

ஆஸ்காருக்கு சென்ற 'சூரரைப் போற்று'!

12:05 PM Jan 27, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அபர்ணாவின் எதார்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. இந்நிலையில் இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அந்த வரிசையில், பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இதையடுத்து இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள். இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் 'சூரரைப் போற்று' திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT