94- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி நாளை (28/03/2022) காலை ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மேடை அலங்காரம், சிவப்பு கம்பளம் அமைத்தல், ஆஸ்கர் விருதுகளைக் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதிலும் இருந்து தலைசிறந்த பல படங்கள், இம்முறை பல பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ளன. இதனால் ஆஸ்கர் விருதுக்கான அறிவிப்புக்கு உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா டால்பி திரையரங்கில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.