
நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30- ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை. மேலும் சமூக வலைதளங்களிலும் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளியீடு குறித்து படக்குழு சார்பில் நமக்கு பிரத்தியேக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 'சூரரைப் போற்று' படத்தின் பின்னணி வேலைகள் இன்னும் முடியவில்லை எனவும், மேலும் ரிலீஸ் குறித்த முக்கிய முடிவு அமேசான் வசம் இருப்பதால், அவர்கள் எடுப்பதே இறுதி முடிவாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)