Skip to main content

அமிதாப் பச்சனுடன் ஏற்பட்ட பிரச்னை. மும்பை சென்ற எஸ்.ஜே.சூர்யா!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019
sj suryah

 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் படம் 'உயர்ந்த மனிதன்'. அமிதாப் பச்சன் முதல்முறையாக தமிழில் நடிக்கும் இப்படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இப்படத்திலிருந்து அமிதாப் பச்சன் விலகியதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இதற்கு எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

mr local

 

"அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். 'மான்ஸ்டர்' படத்தின் ரிலீசுக்கு பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். படப்பிடிப்பின் மூன்றாவது நாளில் அமிதாப் சார் பதிவு செய்த ட்வீட்டில் அவரது அன்பும், எங்களது உழைப்பின் மீது அவர் வைத்திருந்த மரியாதையும் தெரிந்தது. எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும்" என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்! 

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

High Court dismisses petitions filed by SJ Surya

 

தனக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 

கடந்த 2015- ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை சார்பில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை ரத்து செய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வருமான வரி கணக்குக்கான மறு மதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், வழக்குகளை ரத்து செய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா சார்பில் வாதிடப்பட்டது. 

 

ஆனால், முறையான சோதனைக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக, வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால், வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அவரது மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.