ADVERTISEMENT

மீண்டும் தள்ளிப்போன 'மாநாடு'; ஏமாற்றத்தில் ரசிகர்கள்

06:15 PM Nov 24, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, ‘மாநாடு’ படத்தின் சிறு முன்னோட்டமாக ட்ரைலரை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம் தேதிக்குத் தள்ளிப் போனது.

இந்நிலையில் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் தள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு முறை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT