maanaadu movie song goes viral on social media

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பைநிறைவுசெய்த படக்குழு, ‘மாநாடு’ படத்தின் சிறு முன்னோட்டமாக ட்ரைலரைவெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம்தேதிக்குத்தள்ளிப் போனது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="afaf3c2d-1d1c-41a9-a6be-df2f5c489789" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_55.jpg" />

இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் ‘ஒற்றுமையின் குரல்’ என்ற பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், தெருக்குரல் அறிவு இப்பாடலை எழுதி நடிகர் சிம்புவுடன் இணைந்து பாடியுள்ளார்.நேற்று (18.11.2021) வெளியான இப்பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், 1.6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.