Silambarasan starring maanaadu movie release on ottstarring maanaadu movie release on ott

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் பிரபல ஓடிடி தளமானசோனி லைவ்வில் வெளியாகவுள்ளது. விரைவில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.