/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yuvan_4.jpg)
இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பைநிறைவுசெய்த படக்குழு, ‘மாநாடு’ படத்தின் சிறு முன்னோட்டமாக ட்ரைலரைவெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம்தேதிக்குத்தள்ளிப் போனது.
மாநாடு படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ்ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)