ADVERTISEMENT

இரண்டாவது முறையாக கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் ஷங்கர்

03:35 PM Aug 05, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஷங்கர், கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்டோர்களை இயக்கி அப்படங்களை வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி படங்களாக்கியவர். இயக்குவது மட்டுமில்லாமல் 'காதல்', 'வெயில்', 'கல்லூரி' உள்ளிட்ட நல்ல படங்களை தயாரித்தும் உள்ளார். ரசிகர்களால் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கர் தற்போது ராம்சரணின் 'ஆர்சி 15' படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தையும் விரைவில் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஆண்டு தோறும் துரை ரீதியாக சாதனை படைத்து வரும் நபர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் ரெய்னா ஆகியோருக்கு வழங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் ஐசரி கணேஷ் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியில் ஷங்கர் மற்றும் ரெய்னாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

இதன் மூலம் ஷங்கர் இரண்டாவது முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கடந்த 2007-ஆம் ஆண்டு ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT