நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் ராதாரவி, பார்த்திபன், பாக்கியராஜ் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

radharavi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அப்போது பேசிய ராதாரவி நாடகங்கள் குறித்து பெருமையாக பேசினார். மேலும் பேசுகையில், “நாடகங்களை பார்த்து சினிமாக்களில் பலர் திருடிவிட்டனர். நான் பார்க்கும்போது, ரூபாய்க்கு மூன்று கொலை நடகத்தை பார்க்க ஷங்கர் உட்கார்ந்திருப்பார். அப்போது அவர் சின்ன பையன், வேறொரு ட்ரூபில் நடித்துக்கொண்டிருந்தார். அதனால் நாடகக்காரர்களுடன் வந்து பார்ப்பார்.

Advertisment

தற்போது பெரிய பெரிய படங்களெல்லாம் இயக்குகிறாரே அந்த சங்கர்தான். அந்த நாடகத்தை பார்த்து அவருக்கு வொர்க்கவுட்டாகி அன்றைக்கு ஆரம்பித்ததுதான். அவருடைய படங்களெல்லாம் பாருங்கள் ரூபாய்க்கு மூன்று கொலை நாடகத்தின் கான்செப்ட்தான் நான் அடித்துச் சொல்வேன். என்னிடம் வந்து அவரால் சண்டையிட முடியாது. அதெல்லாம் எனக்கு தெரியும் போ என்று சொல்லிவிடுவேன்” என்றார்.