/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/227_13.jpg)
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருப்பதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு 7 வில்லன்கள் இருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அந்த 7 வில்லன்களாக சமுத்திரக்கனி, சிம்ஹா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மறைந்த நடிகர் விவேக் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அவரது மறைவுக்குப் பிறகு அவர் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. அதனால் விவேக்கின் காட்சிகள் இடம்பெறாது எனவும் பேசப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி விவேக்கின் காட்சி இடம்பெறும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)