ADVERTISEMENT

"மக்களின் வாழ்க்கையைவிட டாஸ்மாக் முக்கியமா?" - நடிகர் செந்தில் கேள்வி! 

11:18 AM Jun 12, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். கரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து நடிகர் செந்தில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "மக்களின் வாழ்க்கையைவிட டாஸ்மாக் முக்கியமா? தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி! #CloseTasmac" என பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT