senthil

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், பிரபல காமெடி நடிகர் செந்திலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செந்தில் மட்டுமின்றி அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நால்வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Advertisment

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நடிகர் செந்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் நலமாக இருப்பதாகவும், கரோனா தொற்று ஏற்பட்டால் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி எடுத்துக்கொண்ட காரணத்தால்தான் தனக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறியுள்ள செந்தில், அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.