/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/senthil_6.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். கவுண்டமணிமற்றும்செந்தில் இணைந்து நடித்த படங்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் செந்தில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் செந்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இயக்குனர் ஆவார். இப்படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனைக் கைதியாக நடிக்கவுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)