
நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (16.04.2021) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு நகைச்சுவை நடிகர் செந்தில் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....
"அன்பு தம்பி சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. நானும் அவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். சிறந்த கலைஞர். மிகவும் அன்பானவர். எண்ணற்ற மரங்களை நட்ட அவர், இயற்கை இருக்கும்வரை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். சினிமா இருக்கும்வரை அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)