ADVERTISEMENT

'நான் மிருகமாய் மாற' - சிக்கலில் இருந்து விலகிய சசிகுமார் படம்!

05:03 PM Jul 27, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் 'காமன் மேன்' என்ற படத்தில் நடித்து வந்தார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இதனிடையே 'காமன் மேன்' என்ற தலைப்பின் உரிமை எங்களிடம் உள்ளது என்று ஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே 'காமன் மேன்' என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட ஜாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக ஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. சசிகுமார் படத்தின் 'காமன் மேன்' என்ற தலைப்பை சென்சார் போர்டு ஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு முறையாக கொடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே அறிவிப்பு வெளியான சசிகுமாரின் படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்தது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை படக்குழு தற்போது மாற்றியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு வைக்கப்பட்ட காமன் மேன் என்ற பெயரை மாற்றி நான் மிருகமாய் மாற என்று புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT