/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/325_2.jpg)
தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும்அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின்இயக்கும் 'பிசாசு 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் நாஞ்சில் இயக்கும் 'கா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியாகாட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சலீம் ஹவுஸ், புகழ் கமலேஷ், 'சூப்பர் டீலக்ஸ்' பட புகழ் நவீன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர்.ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ்இப்படத்தை தயாரித்துள்ளார். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுஎனவும் விரைவில் வெளியீட்டுதேதியை அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)