gk vishnu

மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜி.கே.விஷ்ணுவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்து சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மகாலட்சுமி என்ற பெண்ணை அவர் மணமுடித்தார். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழல் நிலவுவதால் மிகக்குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Advertisment

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நேரில் சென்று ஜி.கே.விஷ்ணு-மகாலட்சுமி தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment