sasikumar common man movie tittle issue

Advertisment

இயக்குநர்சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் 'காமன் மேன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இதனிடையே 'காமன் மேன்' என்ற தலைப்பின் உரிமை எங்களிடம் உள்ளது என்று ஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. இயக்குநர்சுசீந்திரனிடம்இணை இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே 'காமன் மேன்' என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட ஜாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம்தெரிவித்துள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9511cc27-0de3-483a-8afd-8b6941bed098" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_25.jpg" />

Advertisment

இந்நிலையில் சசிகுமார் படத்தின் 'காமன் மேன்' என்ற தலைப்பை சென்சார் போர்டுஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு முறையாக கொடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே அறிவிப்பு வெளியான சசிகுமாரின்படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.