ADVERTISEMENT

'சார்பட்டா பரம்பரை' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

05:48 PM Jul 12, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துசண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் பணிகள் கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டன. கரோனா நெருக்கடி நிலை தளர்வுக்கு பிறகு மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப்பணிகளை நிறைவு செய்யும் கட்டத்தில் உள்ளது. கரோனா இரண்டாம் அலை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், மக்களின் வருகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து திரைத்துறையினர் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது. இதைக் கவனத்தில் எடுத்த சார்பட்டா பரம்பரை படக்குழு, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்து, வரும் ஜுலை 22 ஆம் தேதி சர்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில், படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இயக்குநர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரைலர் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT