/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/237_0.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘காலா’.இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு, தயாரிப்பில் கவனம் செலுத்திவந்த பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்தார். வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு சார்பட்டா பரம்பரை எனும் பெயரில் இப்படம் உருவாகிவந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கான ஒலிக்கலவை பணிகள் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடும் முயற்சியில் படக்குழு இருப்பதாகவும், அதற்காக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)