ADVERTISEMENT

முதலமைச்சரான எஸ்.ஏ. சந்திரசேகர்!

11:48 AM Nov 18, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

நடிகர் சிம்பு, தற்போது நடித்து வரும் படம் மாநாடு. கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை, சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

மாநாடு படம் அரசியலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், படத்தில் அவர் முதலமைச்சராக நடித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை பதிவுசெய்து சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT