நடிகர்விஜய்யின்தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்,சமீபத்தில் விஜய்யின்பெயரில் ஒரு கட்சியைபதிவு செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்த அக்கட்சியின் பொருளாளராக, விஜய்யின்தாயார் ஷோபாவும், தலைவராகபத்மநாபன் என்கிறஆர்.கே.ராஜாவும்நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதனைதொடர்ந்து விஜய், “தனக்கும், தன் தந்தை பதிவு செய்தகட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனஅறிக்கை ஒன்றைவெளியிட்டார்.மேலும் அந்த அறிக்கையில்,தனது விஜய்மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ, புகைப்படத்தையோ அனுமதியின்றி யார் பயன்படுத்தினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்” அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து விஜய், தனதுமக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாகநிர்வாகிகளை நியமித்தார்.
இதனிடையே, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ஷோபாராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் அவர், அஸோசியேஷன் ஆரம்பிக்கப்போவதாக கூறி, எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னிடம்கையெழுத்து வாங்கியதாகவும் குற்றம்சாட்டினார். இந்தநிலையில், எஸ்.ஏ.சி. கட்சியின்தலைவராக நியமிக்கப்பட்ட பத்பநாமன் என்கிறஆர்.கே.ராஜா, தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், உறுப்பினராக தொடர்ந்து செயல்படப்போவதாகவும் அறிவித்துள்ளார். தனதுகட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் விலகியது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.