ADVERTISEMENT

ட்ரைலர் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு!

11:20 AM Dec 01, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.பெரும்

பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ட்ரைலர் வரும் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் படத்தின் ட்ரைலர் வெளியாகாது எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எதிர்பாராதவிதமாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரைலரை 3 ஆம் தேதி வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT