rrr movie uyire song release date announced

Advertisment

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ad

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் 'நட்பு...' மற்றும் 'நாட்டு கூத்து...' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில், படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், "‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் 'உயிரே' என்ற பாடல் வரும் 26ஆம் தேதி வெளியாகும்” என அறிவித்துள்ளது.