rrr movie ott release date announced

இயக்குநர் ராஜமௌலி ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆலியா பட்,அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்குமத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இயக்குநர்ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஆர்.ஆர்.ஆர் படமும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகானஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

Advertisment

இந்நிலையில்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வரும் 20 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.