ADVERTISEMENT

ரிஹானா கலை நிகழ்ச்சியும் ஷாருக்கானின் டான்ஸும் - வைரலாகும் வீடியோ

05:21 PM Mar 02, 2024 | kavidhasan@nak…

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடக்கிறது. குஜராத் ஜாம் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார்.

இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும் இரவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களோடு நடனமாடினார். ஜான்வி கபூருடன் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நிகழ்ச்சியில் ஷாருக்கான் ஆடிய வீடியோவும் வைராகி வருகிறது.

பாப் பாடகி ரிஹானா கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT