'Ready ...' - Teaser release of Atlee, Shah Rukh Khan movie

'ராஜாராணி' படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் அட்லீ. இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அட்லீ. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அனிருத் அறிமுகமாகிறார். 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment