விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

bigil

Advertisment

Advertisment

அட்லியின் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் விஜய் மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து வருகின்றனர். ஏற்கனவே இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலை நேற்று வெளியிட்டுள்ளது படக்குழு. உனக்காக என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நெஞ்சை உருக்கும் ரஹ்மானின் மெலடியை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றூம் மதுரா தாரா தல்லூரி பாடியுள்ளனர்.

பிகில் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் கேட்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெறித்தனம் பாடலை விஜய் மேடையில் பாட இருக்கிறார் என்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் ஷாரூக் கானும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

alt="super duper" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="abb095ef-d124-4db9-8cee-8e24bbeb0146" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/super%20duper_14.png" />

இந்நிலையில், படக்குழுவை சேர்ந்தவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக ஷாருக் கான் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார், நடனம் ஆடியிருக்கிறார் என்று பல வதந்திகள் வெளியானது. அதேபோல இதுவும் ஒரு வதந்தி என்று படக்குழு கூறுகிறது.