ADVERTISEMENT

மீண்டும் லீக்கான ரஜினி வீடியோ.. ரசிகர்கள் மகிழ்ச்சி.. படக்குழு அதிர்ச்சி...

02:25 PM Jun 05, 2019 | santhoshkumar

தர்பார் ரஜினி காந்த் நடிக்கும் 166வது படம். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். நிவேதா தாமஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் இருந்து நிவேதா படக்குழுவுடன் கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.

‘தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் முதலாம் கட்ட ஷூட்டிங் முடிவடைந்ததால் வேறு எந்த போட்டோவும், வீடியோவும் லீக் ஆகாமல் இருந்தது.

தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இப்படபிடிப்பிடில் இருந்து ஒரு காட்சி லீக்காகி வைரலாகி வருகிறது. போலீஸ் வாகனத்தில் இருந்து ரஜினி இறங்கி நடந்து வரும் காட்சி வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும், படக்குழுவினருக்கு மேலும் அதிர்ச்சியும் தந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT