தர்பார் படத்தில் இசையமைப்பாளராக பணிபுரியும் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

Advertisment

rajnikanth

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருக்தாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், தர்பார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பதால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.