ADVERTISEMENT

சூர்யாவின் "வாடிவாசல்" -தயாரிப்பாளர் உறுதி !

10:05 AM Nov 30, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

நடிகர் சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை தயாரிப்பளார் தாணு தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

சூர்யா, பாண்டிராஜ் இயக்கும் படத்திற்கு பிறகு, வாடிவாசலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில், வாடிவாசல் படம் கைவிடப்பட்டுள்ளதாக வந்த தகவலை மறுத்துள்ள தயாரிப்பாளர் தாணு, வாடிவாசல் வலம் வரும், வாகை சூடும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தயாரிப்பாளர் தாணு, தனது ட்விட்டர் பதிவில், "எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில், "வாடிவாசல் வலம் வரும், வாகை சூடும்" என உறுதியாக கூறியுள்ளார். மேலும் பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம் எனவும், அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT