Settled in Mumbai? - Explanation of Surya

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்நிலையில் சூர்யா மும்பையில் இருக்கும் படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியானது. அத்துடன் 9 ஆயிரம் சதுர அடியில் ரூ. 70 கோடி மதிப்புள்ள புதிய வீட்டை வாங்கி விட்டதாகவும், அதில் ஜோதிகாவுடன் மும்பைக்கே சென்று செட்டில் ஆகிவிட்டதாகத்தகவலும் பரவி வந்தது.

இந்த தகவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகச் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சூர்யா பதில் அளித்துள்ளார். அதில், ”நான் மும்பையில் குடியேறிவிட்டதாகச் சொல்லப்படும் தகவல் உண்மையில்லை.மும்பையில் படிக்கும் என் குழந்தைகளைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி அங்கே சென்று வருகிறேன்” என்று பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.