suriya

நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 40' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். தனக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பாண்டிராஜ், 'சூர்யா 40' படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "35% படம் முடிந்துள்ளது. எடுத்தவரைக்கும் நன்றாக வந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் தொடங்கப்படும். எங்கள் குழுவினர் அதற்கு தயாராக உள்ளனர். படத்தின் தலைப்பு முறையான அறிவிப்போடு வெளியாகும். ஜூலைவரை எங்களுக்கு நேரம் அளியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.