/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/380_1.jpg)
சூர்யா தற்போது பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளன்று சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை 'வாடிவாசல்' படக்குழு வெளியிட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இதனிடையே சிறுத்தை சிவா மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல இந்தி இயக்குநர் ஃபரூக் கபீர் இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சூர்யாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்தியில், 'சூரரைப் போற்று' படத்தின் ரீமேக்கில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)