ADVERTISEMENT

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரபுவின் கருத்து

04:59 PM Aug 03, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜய், நடிப்பதைத் தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும், அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இதனால், விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு" எனப் பதிலளித்தார். அண்மையில் காமராஜர் பிறந்தநாளில் விஜய் தொடங்கிய இரவுப் பாடசாலைத் திட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ், "நல்ல விஷயம் தானே. தன்னார்வலர்கள் போல் விஜய்யும் செயல்படுகிறார்" என வரவேற்றிருந்தார். மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "அரசியல் என்பது வேறு. சினிமா என்பது வேறு. விஜயகாந்த் போல் யாராவது வர நினைத்தால் விளைவு மிக மோசமாகத்தான் இருக்கும். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபுவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், "எல்லாரும் வர வேண்டும். அவரும் வரட்டுமே. சமூக சேவைகள் பண்ண வேண்டும் என விஜய் நினைக்கிறார். இளம் ரத்தம் வர வேண்டும் அல்லவா. சந்தோஷமான விஷயம் தான்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT