ADVERTISEMENT

மனைவியின் பிறந்தநாளில் அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ; போனி கபூர் திட்டம்

05:31 PM Jul 06, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'வலிமை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கும் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித் தனிப்பட்ட காரணத்திற்காக லண்டன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் 'ஏகே 61' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13, போனி கபூரின் மனைவி மறைந்த ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அந்நாளில் 'ஏகே 61' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்ப்ரைஸாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை போனி கபூர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT