எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்குமேல் உடல்எடையை குறைத்துள்ளார்.'ஏகே 61' படத்திற்காகஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் சென்னைமவுண்ட் ரோடுபோன்றபிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்பிலிம்ஸ்சிட்டியில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வங்கி கொள்ளையை சுற்றி திரைக்கதை அமைந்துள்ளதாகவும், முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துதீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து 'ஏகே 61' படக்குழு குறித்ததகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி ஒளிப்பதிவு நீரவ் ஷா, இசை ஜிப்ரான், படத்தொகுப்பு விஜய் வேலுக்குட்டி, சண்டை பயிற்சி சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்பராயன், எனவே தனதுவழக்கமான டீமை எச் வினோத் 'ஏகே 61' ல் களமிறங்கியுள்ளதாககூறப்படுகிறது.